SAYED ABUTHAHIR profile
SAYED ABUTHAHIR
96 7 4
Posts Followers Following
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
 குகை கண்டு தவம் வென்ற தவசீலரே,
 மறைக்கண்டு வழிகொண்ட குணசீலரே,
 பகை கொண்ட படை வென்ற மகராஜரே
 எம் மஹமூதரே!
ஓய்வெடுக்காத பொழுதுகளின் ஓட்டத்தில்!
தேடுகின்ற ஜீவனும் கரைகின்றதே காணாமல்
உங்கள் திரு வதனத்தை.
 யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
ஆண்டுகள் ஐய்யாயிரம் தாண்டியும் 
தன் கலீலுல்லாவின் குடும்ப தியாகத்தை மெய் சிலிர்த்து மெச்சுகிறான்!இன்றளவும் இறைவன் தன் அடியார்களின் ஒவ்வொரு குர்பானியிலும் சோதனையில் சாதனை கண்டு கத்தி அறுக்க மறுத்த நபி இஸ்மாயிலின் வழித்தோன்றலில் அமைத்தான் அல்லாஹ் அஹமதேன்னும் ஆன்மீக சுடரொளியை. 
 யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம். 

 P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
தலையினில் கட்டிய தலப்பையும்,
தாடையில் தொங்கும் தாடியும்,
இமைகளில் தீட்டும் சுருமையும் ...
தங்கள் மேல் கொண்ட காதல் கோலம் !
மறுமையில் நம்மை இணைக்கும் பாலம் .
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம் .

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
இச்சை,
  இருள்  மேகங்களாய் என்னை 
பாழாக்க  முற்படும் போதெல்லாம்!
உதிக்கின்றது சுடரொளியாய் உங்கள் நினைவுகள் .
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் .

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
கற்ற  தாய்மொழி தாய்மையின் நிலை அடைந்தது!
எழுவது தாயை விட கருணையாளனின் 
தூதர் மேல் கவிகளை பிரசவித்ததால்.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
என் தாய்மொழி தாய்மையின் நிலை அடைந்தது!
எழுவது தாயை விட கருணையாளன்
தூதரின் கவிகளை பிரசவித்ததால்.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
இதயம் தித்திக்கும் நிகழ்வு! 
அதிகம் இனிப்பு உண்ணும் தன் மகனுக்கு 
உபதேசம் செய்யச் சொன்ன தாயிடம்!
அடுத்த வாரம் வாருங்களே என்று 
முன்மொழிந்தார் முஹம்மத்!
மீண்டும் வந்த சிறுவனை அழைத்து
இனிப்பை அதிகம் உண்ணாதேயப்பா
என்று புன்னகைத்தார்!
தாயவள் கேள்வியை பார்வையில் அறிந்து கூறினார்
நானும் இனிப்பு அதிகம் உண்பவன் 
என்னை மாற்றிக் கொள்ளவே 
இந்த ஒரு வார கால அவகாசம்!
உபதேசத்துக்கு தன்னை தகுதியாக்கிக் 
கொண்ட முஹம்மத், 
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம்.

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
ஜீவித்த காலம் எல்லாம் ஜனனிக்காத 
உம்மத்தின் மீது கவலை கொண்டதும்!
ஜனனமான உம்மத்தார் தங்களைக் 
காண நாடி கவலை கொள்வதும்! 
மேலோனின் மேலான ஏற்பாடு.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
பறப்பதற்கு சிறகில்லை என்றாலும்!
தினமும் ஒரு முறை ஏனும் தங்களை 
ஜியாரத் செய்து விடுகிறது .
என் கற்பனை. 
யாரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்.

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
ஹிஜ்ரி 10 துல்ஹஜ் மாதம்
நீங்கள் அறிமுகப்படுத்தி தந்த பயணம்!
இன்னமும் ஓயவில்லை
யுக முடிவு வரை 
ஓயப்போவதுமில்லை,
லப்பைக் என்ற ஒற்றை கோஷத்தோடு, 
வெண்ணிற ஆடையில் உலகெங்கிலும் 
உள்ள ஈமானிய பறவைகள்
காபாவை நாடி பறக்கின்றனவே.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
கேட்கப்படாத கேள்விகளுக்கும்,
விடையானதே 
உங்கள் முழு வாழ்வு.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
வறண்ட பாலைவனத்தில் 
கிடைத்த தேனூற்று!
முத்து நபி முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
படிக்காத புத்தகத்தின்
பிடித்த வரி போல் ஆகிப் போனது!
என் காதலும்.
 காணாமலே தங்களை 
யா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
இன்று அறிவியல் கண்டு பேசும் 
விஞ்ஞானத்தை!
1400 ஆண்டுகள் முன்பே 
பேசி விட்டீர்களே !
மெய்ஞான அறிவாள்.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
முதல் மனிதர் ஆதம் நபி 
கண் விழித்ததும் கண்ட பெயர் !
இறுதி உயிர் இந்த மண்ணை விட்டு 
பிரியும் வரை,
நிலைக்கொண்ட பெயர்.
முஹம்மது ரசூலுல்லாஹி
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
கண்ணாடியில் என் முகம் பார்க்க 
விரும்புவதில்லை!
தங்கள் முகம் தேடும் 
என் கண்கள்.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
கடல் அலைக்கு எட்டாத மணல் போல்!
எட்டாமல் நிற்கிறது  என் மனம்!
தங்களின் ஞானக்கடல் தனை. 
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
SAYED ABUTHAHIR
Quote by SAYED ABUTHAHIR - நபியே நாயகமே,
கடிகாரத்தின் மையப்புள்ளியை 
சுற்றி சுழல்கின்ற முட்களை போல்! 
என் நிழல், நிஜம், கனவு 
தங்களைத் தேடி வட்டமடித்துக் 
கொண்டிருக்கிறது. 
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம் .

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
ஓர் மலை குன்றின் மேல் 
ஊன் உறக்கம் இன்றி!
ஒற்றை மாமனிதரின் கடும்  தவத்தால்,
அஹத் அவன் வேதத்தை தரை மீது இறக்கிய 
தலைவரை கொண்ட சமூகம்!
இன்று ஈமானிய வேஷத்தில்,
 கோஷம் போட்டு தவிக்கிறது  தன் உரிமைக்காக.
அருஷினில் நிறைந்தவனை திக்ரு
செய்ய ஆதாரம் கேட்டவன்!
இன்று சேதாரத்தோடு
அரசின் கவனத்தை ஈர்க்க 
வாசகங்களை ஜோடித்து நிற்கிறார்!
கண் விழித்துக் கொண்டு 
உறங்குகிறேன் என்கிற அரசை!
சாட்டையால் எழுப்ப மீண்டும் 
ஒர் உமர்(ரலீ)வேண்டுமே.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே ...
தற்போதைய நிலவரப்படி!
எந்த ஒரு கேள்வி கணக்கின்றி ...
சுவனத்தின் விசா
காசாவிலும்! !!
உயர்தர நரகத்தின் விசா
இஸ்ரேலிலும்
பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது....
வெடிகுண்டின் தாக்கத்தால் பறந்த உடல்கள்,
நாளை சுவனத்தில் சிறகடிக்கும் ...
அதிகார வர்க்கத்திமிரும் ஆணவமும்
நரகத்தில் நாசமாவதை தவிர வேறு வழி இல்லை. 
ஆமீன் கூறுங்கள்! நாயகமே
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம் 

P.Sayed Abuthahir  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
படைப்பின் பிரம்மாண்டத்தை காட்டும் 
விண்மீன்களில் திருப்தி அடையாதவன்!
கடலில்  வகை வகையாய் நீந்தும் 
மீன்களில் திருப்தி கொள்ளாதவன்!
பாலைவனத்திலே 
ஒரு அல் அமீனை தந்து !
முஸ்லிமினிலும்,முஃமினிலும்
பெரும் திருப்தி 
அடைந்தானே வல்ல நாயன்.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம் .

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
நிலவினை தோற்கடிக்கும் பூமானின் முகம் தேடி...
ஓயாமல் கவி சிறகடித்து 
பறந்து வருகிறது
 என் இதயப் பறவை
தங்களை நாடி.
யாரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ...

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
மறக்குமோ நெஞ்சம்
ஆயிரம் போர்  படை வீரர்களைக் கொண்ட குழுவை !
313 பேரால் தோற்கடிக்கப்பட்டு
அல்லா தன் திருக்கலிமாவை நிலை பெறச் செய்த சரித்திர சான்று
இந்நாள்.
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
எண்ணில் அடங்காத குழப்பங்கள் என்னுள் சூழ்ந்த போதும்!
 தங்களை  என்னிட மறவாமல் செம்மைப்படுத்த வார்த்தைகளைத் தேடிக் கொண்டே இருக்கிறது 
என் நினைவு .
யாரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
உஹது போர்க்களத்தில் சுவனத்தின் நறுமணம் நுகர்ந்து தீனுக்காக முன்னோடிய சமூகம்!
இன்று கேளிக்கையாய் ஊடகங்களுக்கும் விளம்பரங்களுக்கும்
விலை போனது மட்டுமின்றி,
தகுதியற்ற தலைவர்களை முன்னிறுத்தி பின் சென்று கொண்டிருக்கிறது!
குறிப்பு : 
இஃப்த்தார்,
படைத்தவன் இறங்கி தன் அடியானை பார்க்கிறான்,
அடியானோ தனக்கு பிடித்தவனை பார்க்கிறான்? ??
மாற்றம் வேண்டுமே
 யா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  .

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
என் நினைவு, உணர்வு
இரண்டுமே மதீனாவுக்கு இடம் பெயர்ந்து விட்டது !
உடல் மட்டும் ஜன்னத்துல் பக்கியில் 
அடைக்கலம்  சேரும் காலம் எப்பொழுது,
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
அர்ரஹீம் ஆணையிட ...
ஆதமை படைத்திட ...
விண்ணவர் நீரையும் மண்ணையும் ஒன்றாகிட  ...
அந்நேரம் இருளங்கு சூழ்ந்திட ...
மறைந்திருந்த நூர் ஒன்று வெளிப்பட ...
வானவர்களும் வியந்திட ...
ஜிப்ரியிலின் வயதும் தோற்றிட ...
முஹமூதை தன் வசம் மறையவன் காத்திட ...
மார்க்க மேதைகள் இச்சம்பவத்தை
ரூஹுல் கிதாபில் பதிவிட ...
படித்தவர் மெய் சிலிர்த்திட ...
மதியால் முடியாது அளந்திட ...
விதியால் முடியாது விவரித்திட ...
எவராலும் முடியாது எழுதி முடித்திட,,,
தங்களின் புகழ் தன்னை
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
தங்கள் தரிசனம் தேடி அலையும் என் மேல் இன்னும் கரிசனம் காட்ட  மனமில்லையோ!
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
தீரா தவத்தால் முஹமூதர் 
மரையோனின் மறை கண்ட
 மாதமே!
அஸ்ஸலாமு அலைக்கும்,
வருக...வருக...
 நப்ஸ் என்னும் மதம் பிடித்த யானையை
கட்டி ஆளும் புண்ணிய மாதமே
வருக...
எம்பெருமானார் கண்ணியப்படுத்திய 
செம்மை மிகு மாதமே 
வருக...
ஏக நாயனே,
கண்மணி நாயகமும் ,
அவர்களின் சத்திய ஸஹாபாக்களும்!
இம்மாதத்தை சிறப்பித்தது  போல்
வாய்ப்பினை தந்தருள்வாய்
இந்த உம்மத்தே
முஹம்மதியாவுக்கும் 

கண்டேன் கண் சிவந்தேன்!
சரித்திர பக்கங்கள் 
இதுவரை கண்டிடாத வரிகளை தங்களின் 
வாழ்க்கை நிகழ்வில்!
மஸ்ஜிது நவபியிலே ஆளுமை பதவியிலே !
அமர்ந்தவராய் உரையாடிக் கொண்டிருக்கையிலே,
அவ்வழியே தூக்கிச் செல்லப்பட்ட   
யூத பிணத்திற்கு எழுந்து நின்று.
மௌனமாய் தன் சமூகத்திற்கு  மனிதம் கற்றுத்தந்த
 தங்கத் தலைவர்,
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.  

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
விழித்திருந்த கண்களின் காட்சியிலும்!
உறங்கிய கண்களின் கனவுகளிலும்!
தாங்கள் இடம் பெறும் வரை,
இரண்டுமே பயனில்லாமல் போகிறதே.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 
 
P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
மதினத்து மாணிக்கம் எம்பெருமானாரை
தேடிய என் இதயம்!
திரும்பவில்லை என்னிடம் 
தாயை மறந்து மழலை போல!
உங்களிடமே தங்கி விட்டதே.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
ஸலாத்திலும் ஸலவாத்திலும்   
உறைந்த உணர்வுகள்
காத்து கிடக்கின்றது!
தங்களின் பதிலுக்காக 
 யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம் .
 
P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
கண்ணீர் துளிகள் கன்னத்தில் எழுதும் கவிதைகள் கோடி!
ஏக்கத்தின் தாக்கத்தால்
தங்களை நாடி,
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.  

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
அற்புதத்தை எளிதாய் காட்டும் கனவுகள் கூட!
காண தவம் கிடக்கும் பேரற்புதமே.
முஹம்மது ரசூலுல்லாஹி 
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் .

 P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
கூட்டுக்குள் இருக்கும் பறவை 
கூட்டின் சிறு கதவு திறக்கப்பட்டால் 
பறந்த வானில் சிறகடிக்க துடிப்பது போல்! 
பரந்த உலகை விட்டு
தங்கள் தர்பாரின் கதவு துளைதனில் நுழைந்து
அடைபட துடிக்குது இந்த அடியானின் எண்ணம்!
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
பல வருட காலமாய் நோன்பிலேயே  
இருக்கும் என் கண்களுக்கு!
இஃப்தாராய்
காட்சி தாருங்களேன்.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
முற்றுப்புள்ளி இல்லாத ஒரு காவியமாக தொடர்கிறது,
1400 ஆண்டுகள் தாண்டியும்!
கவிஞர்களின் எழுதுகோல் 
மரணித்தாலும் மரணிக்கப் போவதில்லை என்றும் தங்களின் 
புகழ் !
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
கடல் அலை தழுவிடும் பாதங்களாய் 
நிற்கிறேன்! 
தங்களின் ஆன்மீக கடலுக்குள் என்னை மூழ்கடிக்க தெரியாதவனாய்.
யா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 
 
P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
பாறைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை,
ஓடும் நீரருவி சுத்தம் செய்வதுபோல்!
மனதுக்குள் இருக்கும் குப்பைகளை அகற்றி விடுகிறது!
ஸலவாத்துகள்.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
பூட்டுக்கு சேராத சாவி போல் !
உங்கள் மனதைத் திறக்கும்
வரிகளை இன்னும் எழுதத் தெரியவில்லையே.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
உறக்கத்தில் பூக்கும் கனவுகளில்
தங்களைத் தேடி பறக்கின்ற வண்ணத்துப்பூச்சியாகினேனே. 
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
உலகத்தில் மலர்ந்த மலர்களின் மனம் 
எல்லாம் வாடும்வரை!
1500 ஆண்டுகள் தாண்டியும்.மேலும் 
கால வரைமுறைக்குள்  அடங்காமல்!
மனம் வீசும் மதினத்து மலர் மஹமூதின்
வான் புகழ் தன்னை மதியால்
 அளந்திட முடிந்திடுமோ.
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
ஆழ்கடல் கான அற்புத முத்தை!
மக்கத்துக் குறைஷி குலம் 
கண்டதென்ன  பாக்கியமோ.
முத்து முஹம்மதே
யாரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம். 

  P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
மண்ணகத்து உறவுகள் என்னை மண்குழியில் மூடிய பின் !
மறைமுகமாய் இருக்கும் தங்களின் உறவு!
மலர்ந்திடுமோ? 
யாரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே ,
கற்பனையில் தங்களோடு பேசி மகிழ்வதால்!

நிஜத்தில் ,

மௌனமே 
என் மொழியானதே,
யா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

P.Sayed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
ஒவ்வொரு முறையும் தொடங்கும் போது கொண்டாட்டத்தோடு தொடங்கும் இந்த வரிகள்!
முடிவில் தங்களை முழுமைப்படுத்த முடியாமல் தோற்றுப் போய் மீண்டும் தொடர்கிறதே !
தோற்றுப் போவதற்கு .
யா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் .

P.Syed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
உலகத்தில் இரட்டை வரலாறு இல்லாத,
ஒற்றை புனிதர் நீங்கள்!
அஹதவன் தன் ஒளியினால்
 செதுக்கிய அழகிய காவியமே!
ஒப்பற்ற வான்மறையின் வரி உணர்ந்து
வாழ்ந்த ஜீவிதமே!
கண்ணில் நீரோடு அழைக்கிறான்
 உம்மத் இவன் ,
காரணம் நிகழ்த்தி காரியத்தில் 
ஜெயம் தாருமே. 
யா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம் .

P.Syed Abuthahir.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
SYED ABUTHAHIR
Quote by SYED ABUTHAHIR - நபியே நாயகமே,
காகிதப் போர்க்களத்திலே
எழுதுகோலின் வாழ் வீச்சால்
வடிந்த மைத்துளிகளின் 
தாக்கம் !
ஓயப் போவதில்லை
வான வீதிகளில் 
விதிமுறை இல்லாமல் 
பறக்கின்ற பறவை போல்!
என் கற்பனைகள் 
பறக்கின்றதே தங்களை தேடி .
யா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லம்.

P.Syed Abuthahir  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes